திருநெல்வேலி

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் சிறப்பு உழவாரப் பணி: 800 பேர் பங்கேற்பு

DIN


தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் இந்து ஆலயங்களை சுத்தம் செய்யும் இறைப் பணி சபையின் சார்பில் உழவாரப் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இப்பணியில் 800 பேர் பங்கேற்றனர்.
இந்த சபையின் 209-வது சிறப்பு உழவாரப் பணி தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கியது. கோயில் சுற்றுப்பிரகாரம், கோசாலை, கோயிலில் உள்ள குளம், நந்தவனம் பகுதிகளில் உள்ள தேவையற்ற செடி,கொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நமச்சிவாய உழவாரப் படையின் தலைவர் ஏ. வேணுகோபால் தலைமை வகித்தார். 
செயலர் நா. வீரமுத்து, பொருளாளர் இரா. வசந்தகுமார், துணைச் செயலர் சத்தியநாதன், துணைத் தலைவர் கருப்புசாமி, சட்ட ஆலோசகர் எஸ். சாந்தன்பாபு, லோகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீதிபதி ஜி. நாகராஜன் உழவாரப் பணியை தொடங்கிவைத்தார். உழவாரப் பணியில் சென்னை, சூளைமேடு, பெரம்பூர், அம்பத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 800 பேர் ஈடுபட்டனர்.
இருநாள்கள் நடைபெறும் இப்பணியின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை தென்காசி தெப்பகுளத்தில் சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது. முன்னதாக, தென்காசி கோயிலுக்கு வந்த இறைப்பணி சபையினரை உலகளாவிய ஓம் நமசிவாய அறக்கட்டளை மாநிலச் செயலர் ஈஸ்வரன், நகர பாஜக தலைவர் திருநாவுக்கரசு,  சங்கரசுப்பிரமணியன், ராஜ்குமார், காந்தி ஆகியோர் வரவேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT