திருநெல்வேலி

திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தில் 23, 24இல் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

DIN

தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக  வரும் 23மற்றும் 24 ஆகிய இருதினங்கள் தொகுதி வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன் வெளியிட்ட அறிக்கை:
தென்காசி மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் தனுஷ் எம்.குமார் போட்டியிடுகிறார்.
இதை முன்னிட்டு தொகுதி வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. வரும் 23ஆம் தேதி காலை 10 மணியளவில் வாசுதேவநல்லூர் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் சிவகிரி தேவர் திருமண மண்டபத்திலும்,  மாலை 5 மணியளவில் சங்கரன்கோவில் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் சங்கரன்கோவில் ஏஏஆர் மகாலிலும் நடைபெறுகிறது.
கடையநல்லூர் தொகுதி செயல்வீரர்கள்கூட்டம் 24ஆம் தேதி காலை 10 மணியளவில் கடையநல்லூர் மாவடிக்கால் வடுகாயர் யாதவர் திருமண மண்டபத்திலும், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மாலை 5 மணியளவில் குத்துக்கல்வலசை ஏஆர்ஆர் மகாலிலும் நடைபெறுகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT