திருநெல்வேலி

மே தினத்தில் விதிமீறல்: 92 நிறுவனங்களுக்கு அபராதம்

DIN

தேசிய விடுமுறை தினமான மே தினத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக 92 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது தொழிலாளர் துறை. 
இது தொடர்பாக திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால் உத்தரவின் பேரில், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் ரா.பாலச்சந்திரன் ஆலோசனைப்படி, தொழிலாளர் இணை ஆணையர் சி.ஹேமலதா வழிகாட்டுதல்படி மே தினத்தன்று தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் கடை மற்றும் நிறுவனங்களில் சிறப்பாய்வு மேற்கொண்டனர்.
  தேசிய விடுமுறை தினத்தன்று கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும்  ஊழியர்களுக்கு தேசிய மற்றும் பண்டிகை விடுமுறைகள் சட்டத்தின்படி விடுமுறை அளிக்க வேண்டும். மாறாக அன்றைய தினம் பணிபுரியும் சிப்பந்திகளுக்கு இரட்டிப்பு ஊதியமோ அல்லது ஊதியத்துடன் கூடிய மாற்று விடுப்போ அளிக்க வேண்டும். 
  தேசிய விடுமுறை தினத்தில் பணிபுரிய விரும்பும் ஊழியர்களிடம் சட்ட விதிகளின்படி உரிய படிவத்தில் கையொப்பம் பெற்று, அதன் ஒரு நகலை நிறுவனத்தின் அறிவிப்பு பலகையிலும், மற்றொன்றை 24 மணி நேரத்திற்கு முன்பாக சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 195 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 92 நிறுவனங்கள் சட்ட விதிகளை கடைப்பிடிக்காமல் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

SCROLL FOR NEXT