திருநெல்வேலி

சொக்கம்பட்டி சந்தனமாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

DIN

கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி அருள்மிகு சந்தனமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை பூக்குழி திருவிழா நடைபெற்றது.
இக்கோயிலில் பூக்குழி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுடன் தொடங்கியது. அன்றுமுதல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் விரதம் மேற்கொண்டு வந்தனர். இதையொட்டி தினமும் சிறப்பு அபிஷேக,  அலங்கார, பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை அன்னதானமும்,  வியாழக்கிழமை தீர்த்தம் எடுத்து வருதலும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. 
மாலையில் முளைப்பாரி,  அக்னிச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கினர். ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT