திருநெல்வேலி

பூக்கடைகளில் 18 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.15 ஆயிரம் அபராதம்

DIN

தச்சநல்லூர் மண்டலத்தில் 29 பூக்கடைகளில் இருந்து 18 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பெ.விஜயலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தும் சிறு மற்றும் குறு நிறுவனங்களைக் கண்காணிக்க மாநகராட்சி ஆணையர் பெ.விஜயலெட்சுமி 8 கண்காணிப்புக் குழுக்களை நியமித்துள்ளார். இந்தக் குழுவினர் தினமும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி மாநகராட்சி மண்டல பகுதிகளில் இயங்கும் கடைகள்,  வணிக வளாகங்கள், நிறுவனங்கள், ஹோட்டல்கள், பூக்கடைகள், இறைச்சிக் கடைகள், பேருந்து நிலைய கடைகள், பொது இடங்களில் கடந்த ஜனவரி 1 முதல் மே 8ஆம் தேதி  வரை கண்காணிப்புக் குழு ஆய்வு செய்து வருகிறது.
தச்சநல்லூர் மண்டலத்தில் புதன்கிழமை 29 பூக்கடைகளில் ஆய்வு செய்ததில், 18 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுவரை ஒட்டுமொத்தமாக 34,635 சிறு மற்றும் குறு நிறுவனங்களில் 2,700 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ. 2 லட்சத்து 78 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT