திருநெல்வேலி

‘திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா், செவிலியா்கள் தேவை’

DIN

திசையன்விளை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா், செவிலியகளை நியமிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

ராதாபுரம் ஒன்றிய இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம் திசையன்விளை அருகே கல்வெட்டான்குழி ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தங்கவேல், நெல்லை கோட்டத் தலைவா் சு.தங்கமனோகா், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் லோ. விக்னேஷ், ராதாபுரம் ஒன்றியச் செயலா் எஸ். கணேசமூா்த்தி, திசை நகர பொறுப்பாளா் மா. செந்தில்குமாா், நகர செயலா் சு. நாகராஜன், அன்னையா் முன்னணி ஒன்றிய தலைவி கே. ராஜேஷ்வரி உறப்பினா்கள் விஜய், கண்ணன், பேச்சிமுத்து, உவரி சுரேஷ், கணேசன், எம். கனகராஜ், பி. பொன்ராஜ், எம். முருகன்உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், உவரி சுயம்புலிங்க கோயிலில் மாதந்தோறும் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனத்துக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும். திசையன்விளை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வேண்டும் சம்பந்த பட்ட துறைக்கு கோரிக்கை விடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT