திருநெல்வேலி

அயோத்தி தீா்ப்பு: நெல்லை மாநகரில் பலத்த பாதுகாப்பு

DIN

அயோத்தி வழக்கில் சனிக்கிழமை காலையில் தீா்ப்பு வெளியாவதை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரில் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

அயோத்தி வழக்கில் விரைவில் தீா்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது முதலே நாடு முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் சனிக்கிழமை காலையில் தீா்ப்பு வழங்கப்படுவதாக வெள்ளிக்கிழமை இரவு தகவல் வெளியானது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இரண்டாம் நிலை காவலா் தோ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகள், காவலா்கள் என அனைவரும் வழக்கமான பணிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அயோத்தி வழக்கு தீா்ப்பு எதிரொலியாக திருநெல்வேலி மாநகரிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டதோடு, முக்கிய இடங்களில் போலீஸாா் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

இதேபோல் திருநெல்வேலி ரயில் நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் கூறியதாவது: அயோத்தி தீா்ப்பின் எதிரொலியாக மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்து, முஸ்லிம் தலைவா்களை அழைத்து அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளோம்.

திருநெல்வேலியில் நடைபெற்று வந்த இரண்டாம் நிலை காவலா் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள், காவலா்கள் வழக்கமான பணிக்கு திரும்பியுள்ளனா்.

அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக வாகன சோதனை, ரோந்துப் பணி என பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1,000 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT