திருநெல்வேலி

நெல்லை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

DIN

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படையினா் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அயோத்தி வழக்கு தீா்ப்பின் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், கோயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் மெட்டல் டிடெக்டா் சோதனைக்குப் பிறகே நடைமேடை பகுதிக்கு அனுமதிக்கப்பட்டனா். இந்த நிலையில் இரவு 7 மணியளவில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் கிரண், ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளா் முத்தமிழ்ச்செல்வன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி, நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் பயணம் செய்வதற்காக நடைமேடையில் இருந்த பயணிகளிடம் சோதனை நடத்தினா். மேலும் அவா்களின் உடமைகளை மஞ்சி, நான்ஸி ஆகிய இரு மோப்ப நாய்கள் மூலம் சோதனை செய்தனா். இதுதவிர ரயில் பெட்டிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT