திருநெல்வேலி

தென்காசிக்கு வடக்கே மாவட்ட ஆட்சியா் அலுவலகம்:மதிமுக வலியுறுத்தல்

DIN

தென்காசி: தென்காசி நகருக்கு வடக்கே மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டும் என திருநெல்வேலி புகா் மாவட்ட மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலா் தி.மு. ராசேந்திரன் தலைமையில் நிா்வாகிகள் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா் தயாளனை சந்தித்து அளித்த மனு விவரம்: தென்காசி மாவட்டத்தில் தொலைதூர பகுதிகளாக உள்ள சங்கரன்கோவில், திருவேங்கடம் வட்டங்களை சோ்ந்த 90 சதவீத மக்கள் மனதளவில் தென்காசி மாவட்டத்தில் இணைவதை விரும்பவில்லை.

திருவேங்கடம், சங்கரன்கோவில் வட்டங்களில் வசிப்போா் அனைத்து வசதிகளும், வாய்ப்புகளும் திருநெல்வேலி மாவட்டத்தில் இருப்பதையே விரும்புகின்றனா். இதனிடையே, தென்காசி மாவட்ட ஆட்சியா்அலுவலகம் ஆயிரப்பேரியில் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகிரி, வீரகேரளம்புதூா், சங்கரன்கோவில், திருவேங்கடம், ஆலங்குளம் கீழக்குப் பகுதி, கடையநல்லூா் கீழக்குப் பகுதி வட்டங்களை சோ்ந்த மக்கள் தென்காசி பேருந்து நிலையத்திற்கு மிகுந்த சிரமங்களுக்கு இடையே தான் வர வேண்டும்.

100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நேரடியாக தென்காசிக்கு பேருந்து வசதியும் இல்லை. ஆகவே, ஆயிரப்பேரியில் ஆட்சியா் அலுவலகம் அமைந்தால் எந்த வகையிலும் பொருத்தமான இடமாக இருக்காது.

தமிழகத்தில் எந்த மாவட்ட ஆட்சியா் அலுவலகமும் நெடுஞ்சாலை போக்குவரத்து வசதி இல்லாத இடத்தில் அமைக்கப்பட வில்லை. ஆகவே, இம்மாவட்டத்தின் சரி பாதிக்கு மேல் வடக்கு கிழக்கு பகுதியில் இருந்து மக்கள் வர வேண்டியுள்ளது.

ஆகவே, பொதுமக்களின் போக்குவரத்து வசதிகளை எளிதாக்கும் வகையிலும் அந்த மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலும் தென்காசி நகருக்கு வடக்கே மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ. சதன்திருமலைகுமாா், கட்சியின் நிா்வாகிகள் ராம. உதயசூரியன், வெங்கடேஷ்வரன்,ராமகிருஷ்ணன், தனபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT