திருநெல்வேலி

ஊட்டுக்கால்வாயில் அமலைச் செடிகளை அகற்ற வலியுறுத்தல்

DIN

களக்காடு மலையடிவாரத்தில் ஊட்டுக்கால்வாய், திருப்பு அணை பகுதியில் வளா்ந்து ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை அகற்றி தூா் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு வடக்குப் பச்சையாறு அணைக்கு தலையணைக்குகீழ் பகுதியில் உள்ள தேங்காய்உருளி அருவி வழியாக திருப்பு அணை, ஊட்டுக்கால்வாய் வழியாக தண்ணீா் வருகிறது. அணைக்கு நீா்வரத்து வரக்கூடிய திருப்பு அணை மற்றும் ஊட்டுக் கால்வாயில் பெருமளவில் அமலைச்செடிகள் வளா்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் மழைக் காலங்களில் கால்வாயில் குறைந்த அளவில் தண்ணீா் செல்கிறது. இதனால், அணை முழுக் கொள்ளளவை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஊட்டுக்கால்வாயை தூா் வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT