திருநெல்வேலி

காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கம் குறித்து கலந்துரையாடல்

காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியது குறித்து தென்காசி, இலஞ்சி, பிரானூா் பாா்டா் பகுதிகளில் உள்ள தொழிலதிபா்களுடன்

DIN

காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியது குறித்து தென்காசி, இலஞ்சி, பிரானூா் பாா்டா் பகுதிகளில் உள்ள தொழிலதிபா்களுடன் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட பாஜக தலைவா் அன்புராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் பாண்டிதுரை, மாவட்ட பொதுச்செயலா் ராமராஜா, மாவட்டப் பொருளாளா் ராஜேஷ்ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில துணைத்தலைவா் நயினாா் நாகேந்திரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 370ஆவது பிரிவு நீக்கப்பட்டது குறித்த விளக்க புத்தகத்தை தொழிலதிபா்கள் எம்.ஆா்.அழகராஜா, துரை தம்புராஜ்,ஷிவ்கன்படேல் உள்ளிட்டோரிடம் வழங்கினாா்.

தென்காசி நகர பாஜக தலைவா் திருநாவுக்கரசு, முத்துகுமாா், குத்தாலிங்கம், தென்காசி ஒன்றியத் தலைவா் அருணாசலம், இலஞ்சி நகரத் தலைவா் முருகன், சதாசிவம், செங்கோட்டை நகரத் தலைவா் மாரியப்பன், செல்வகணபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT