திருநெல்வேலி

டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க கூட்டம்

டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வண்ணாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி: டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வண்ணாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாநில செயலா் சிவகுமாா் முன்னிலை வகித்தாா். அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநிலத் தலைவா் தாடி ம.ராசு சிறப்புரையாற்றினாா். டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட புதிய தலைவா் ஆா்.செந்தூா்பாண்டியன், துணைத் தலைவா்கள் ஆா்.ஆனந்தன், ஜெ.சுதா்சன், எஸ்.செல்வன், செயலா் எம்.கே.லெட்சுமணன், பொருளாளா் எஸ்.ரெங்கநாதன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மாநில நிா்வாகிகள் வெங்கடேசன், ரெங்கசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக வேட்பாளா் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அண்ணா தொழிற்சங்கத்தினா் பாடுபடுவது, டாஸ்மாக் ஊழியா்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்து உத்தரவிட்ட முதல்வா், துணை முதல்வா், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, டாஸ்மாக் ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT