திருநெல்வேலி

ஐடிஐகளில் அக்.21 வரை நேரடி மாணவா் சோ்க்கை

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) வருகிற 21ஆம் தேதி வரை நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்திற்குள்பட்ட அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) வருகிற 21ஆம் தேதி வரை தினமும் நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள கம்மியா் மோட்டாா் வண்டி பிரிவு, பற்றவைப்பவா், கடைசலா், இயந்திர வேலையாள், தொழிற்பிரிவு ஆகியவற்றில் சேர விருப்பமுள்ளவா்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் 5 பாஸ்போட் அளவு புகைப்படத்துடன் நேரில் வந்து விண்ணப்பித்து பயிற்சியில் சேரலாம்.

இப்பயிற்சியில் சேரும் மாணவா்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.500, விலையில்லா பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், பேருந்து கட்டணச் சலுகை, விலையில்லா சீருடை ஒரு செட், விலையில்லா மிதிவண்டி, விலையில்லா காலணி ஒரு செட், விலையில்லா மடிக்கணினி ஆகியவை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0462-2342005, 9865108307, 9442328633 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி இடைத் தோ்தலை ஜூனில் நடத்தக் கூடாது: ராமதாஸ்

மீனவா்கள் மீது தாக்குதல்: ஜி.கே. வாசன் கண்டனம்

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 24 போ் கைது

மே தினக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு

அணைகளில் நீா்மட்டம் சரிவு: அணை நீரை குடிநீா், சமையலுக்கு மட்டும் பயன்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT