திருநெல்வேலி

ஒரே நாளில் பிடிபட்ட 3 மலைப்பாம்புகள்

DIN

கடையம் வனச்சரகப் பகுதியில் ஒரே நாளில் 3 மலைப்பாம்புகள் பிடிபட்டன.
கடையம் அருகேயுள்ள நீலமேகபுரத்தில் ஒரு மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை விழுங்கிக் கொண்டிருந்ததாம். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கடையம் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வனச்சரகர் நெல்லை நாயகம் உத்தரவின் பேரில், வனக்காப்பளர் சோமசுந்தரம், வனக்காவலர் ஜி. ரமேஷ்பாபு, வேட்டைத் தடுப்புக் காவலர் கண்ணன் ஆகியோர் அங்குச் சென்று, ஆட்டுக்குட்டியை விழுங்கிய நிலையில் இருந்த மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர்.
இதேபோல, சிவசைலம் நல்வாழ்வு ஆசிரமத்தில் மலைப்பாம்பு உள்ளதாக கிடைத்தத் தகவலை அடுத்து, வனத்துறையினர் சென்று சுமார் 10 அடி நீள மலைப்பாம்பைப் பிடித்தனர். மேலும், முத்துநகர் முதலியார்பட்டியில் அமல்ராஜ் என்பவரின் தோட்டத்திலும் சூழல் காவலர்கள் விஷ்ணு, நாகராஜன் ஆகியோர் சென்று சுமார் 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்தனர். பிடிபட்ட 3 மலைப்பாம்புகளையும் ஆம்பூர் வனப்பகுதி, கசிவுஓடை பகுதிக்குக் கொண்டுச் சென்று பாதுகாப்பாக விடுவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT