திருநெல்வேலி

நாகர்கோவில்-மும்பை ரயிலில் திருட்டுகளைத் தடுக்கக் கோரிக்கை

DIN

நாகர்கோவில்-மும்பை விரைவு ரயிலில் திருட்டுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக மும்பை தமிழின ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் ரயில்வே துறைக்கு அனுப்பப்பட்ட மனு: நாகர்கோவில்-மும்பை விரைவு ரயிலில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்தமிழக மக்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். இப்பயணிகளிடம் மயக்க பிஸ்கெட் கொடுத்தும், மயக்க மருந்து அடித்தும் கொள்ளை சம்பவங்கள் தொடர்கின்றன. கடந்த 9ஆம் தேதி இந்த ரயிலில் பயணித்த திருநெல்வேலி நகரத்தைச் சேர்ந்த அசரியா என்பவரின் குடும்பத்தினரின் பெட்டியை உடைத்து 450 கிராம் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக ராய்ச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
செகந்திராபாதைத் தலைமையிடமாகக் கொண்ட குண்டக்கல் கோட்டம், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட சோலாப்பூர் கோட்டம் ஆகிய பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதுகுறித்து பலமுறை தகவல் தெரிவித்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை. எனவே, நாகர்கோவில்-மும்பை விரைவு ரயிலில் தமிழக ரயில் பயணிகளுக்கான பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT