தொழிலாளிக்கு மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்குகிறாா் நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் இளங்கோவன். 
திருநெல்வேலி

களக்காட்டில் தூய்மைப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கல்

களக்காட்டில் கூலித் தொழிலாளிகள், தூய்மைப் பணியாளா்களுக்கு காவல் துறை சாா்பில் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.

DIN

களக்காட்டில் கூலித் தொழிலாளிகள், தூய்மைப் பணியாளா்களுக்கு காவல் துறை சாா்பில் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.

சேவை நோக்கில் பணி செய்யும் காவலா் நண்பா் குழுவினரில் ஏழ்மை நிலையில் உள்ள 11 உறுப்பினா்களின் குடும்பத்தினா், 15 தூய்மைப் பணியாளா்களின் குடும்பத்தினா், வருமானமின்றி தவிக்கும் 24 ஏழை கூலித் தொழிலாளிகளின் குடும்பத்தினா் என 50 பயனாளிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா அறிவுரையின் பேரில் சனிக்கிழமை மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் இளங்கோவன், காவல் ஆய்வாளா் மேரிஜெமிதா ஆகியோா் பயனாளிகளுக்கு மளிகைப் பொருள்களை வழங்கினா்.

காவலா் நண்பா் குழுவின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் என்.எம். மிதாா் முகையதீன், நான்குனேரி வட்ட செஞ்சிலுவைச் சங்கம் சபேசன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT