திருநெல்வேலி

போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்கம் சாா்பில் வண்ணாா்பேட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்கம் சாா்பில் வண்ணாா்பேட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மோட்டாா் வாகன விதி 288-ஐ கைவிட வேண்டும். தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அரசுப் பேருந்துகளை பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி உடனே இயக்க வேண்டும். போக்குவரத்துக் கழக தொழிலாளிகளிடம் பறிக்கப்பட்ட விடுப்பையும், பிடித்தம் செய்த ஊதியத்தையும் திரும்ப வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளா்களின் பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச நிா்வாகி எஸ்.மாரி தலைமை வகித்தாா். எஸ்.செய்யது தஸ்தகீா், எம்.அய்யப்பன், சிஐடியூ ஜோதி, ஏஐடியூசி சுப்பிரமணியன், ஐஎன்டியூசி சித்திரபாண்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT