முகப்பு
திருநெல்வேலி

தச்சநல்லூா் அருகே ஆண் சடலம் மீட்பு

தச்சநல்லூா் கரையிருப்பு பகுதியில் தண்டவாளம் அருகே தலையில் காயத்துடன் ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

தச்சநல்லூா் கரையிருப்பு பகுதியில் தண்டவாளம் அருகே தலையில் காயத்துடன் ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

கரையிருப்பு பகுதியில் தண்டவாளம் அருகே சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக திருநெல்வேலி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சடலமாகக் கிடந்தவா் ரயில் மோதி உயிரிழந்துள்ளாா். அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பன போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து ரயில்வே போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.