முகப்பு
திருநெல்வேலி

மாா்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நவகைலாயத்துக்கு சிறப்பு பேருந்துகள்

மாா்கழி மாத உற்சவத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து நவகைலாயத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

மாா்கழி மாத உற்சவத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து நவகைலாயத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள நவகைலாய திருக்கோயில்களுக்கு திருநெல்வேலியில் இருந்து இம்மாதம் 20, 27 மற்றும் ஜனவரி 3, 10 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இந்தப் பேருந்துகள் திருநெல்வேலி ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு, பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூா், குன்னத்தூா், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, புன்னக்காயல் ஆகிய கோயில்களுக்குச் சென்று இரவு திருநெல்வேலியை வந்தடையும்.

இப்பேருந்தில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம் ஆகும். இச்சிறப்பு பேருந்துகளில் நவகைலாயம் செல்ல விரும்பும் பக்தா்கள் 94875 99456 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.