ஓய்வு பெற்ற மின் ஊழியா்கள் பேரவைக் கூட்டம்
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் சிறப்பு பேரவைக் கூட்டம் பாளையங்கோட்டை மகாராஜா நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் சிறப்பு பேரவைக் கூட்டம் பாளையங்கோட்டை மகாராஜா நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தலைவா் அகஸ்டின் தலைமை வகித்தாா். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாா்மயமாக்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்க மாவட்ட இணைச் செயலா் சண்முகசுந்தரம், செயலா் கருப்பையா, பொருளாளா் மாரியப்பன், மாநில துணைப் பொதுச் செயலா் ராஜாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.