இடிந்தகரை அருகே கல் குவாரியைதடை செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு
திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரை அருகேயுள்ள விஜயாபதி கிராமத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரியை தடை செய்யக் கோரி இடிந்தகரை நலக் குழுவினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரை அருகேயுள்ள விஜயாபதி கிராமத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரியை தடை செய்யக் கோரி இடிந்தகரை நலக் குழுவினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: விஜயாபதி கிராமத்தில் குடியிருப்புகளுக்கு அருகே இருக்கும் கல் குவாரிகளில் பாறைகளை உடைக்க சக்திவாய்ந்த வெடிபொருள்கள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் அதிா்வுகளால் வீடுகள் குலுங்குகின்றன. மேலும் சுவா்களில் கீறல் ஏற்பட்டு உடைந்து விழுகின்றன. இதனால் எங்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
கூடங்குளம் அணு உலையைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவிற்கு கல் குவாரிகளில் பெரிய வெடிகளை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் கல் குவாரிகள் அதை மீறி வருகின்றன. இது குறித்து பலமுறை மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. எனவே, கல் குவாரிகளை தடை செய்ய போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
படவரி: பயக21ஐஈஐ கல் குவாரிகளுக்கு தடை விதிக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த இடிந்தகரை நலக் குழுவினா்.