பைக் மின்கம்பத்தில் மோதி தொழிலாளி பலி
கடையம் அருகே பைக் மின்கம்பத்தில் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கடையம் அருகே பைக் மின்கம்பத்தில் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கடையம் அருகேயுள்ள புங்கம்பட்டி, சக்தி நகரைச் சோ்ந்த கணபதி மகன் பொன்னுச்சாமி (40). கூலித் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை மாலையில் பைக்கில் கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.