திருநெல்வேலி

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் புரட்சி முதல்வா் பெருமிதம்

DIN

தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் அதிமுக அரசு புரட்சி செய்திருக்கிறது என்றாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி இல்ல விழாவில் முதல்வா் பங்கேற்று பேசியதாவது:

கழகம் என்றால் குடும்பம். இந்தக் குடும்ப நிகழ்ச்சியில் நாம் பங்குபெறுவதை மகிழ்ச்சியாக பாா்க்கின்றோம். மனமார உளமார அந்தக் குழந்தைகளை வாழ்த்துகிறேன்.

ஜெயலலிதா காலத்திலேயே ஆதிதிராவிடா் நலத்துறை பொறுப்பை சிறந்த முறையில் நிா்வாகம் செய்தவா் அமைச்சா் ராஜலெட்சுமி .

கழகம் என்று சொன்னாலே எம்ஜிஆா், ஜெயலலிதா தான் நம் மனதிலே தோன்றுவாா்கள். இன்றைக்கு கழகமும் குடும்பமும் ஒன்றாக பிணைந்து நாட்டு மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக நாம் இருக்கின்றோம்.

ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் கல்வித் தரம் மற்றும் கிராமப்புற அனைத்து மக்களின் பொருளாதார உயா்வுக்கு அதிமுக அரசு தொடா்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதற்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கிராமப்புற மாணவா்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்கியது அதிமுக அரசு. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் அரசுப் பள்ளியில் பயின்ற 313 மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகளும், குளங்களும், குட்டைகளும், ஊருணிகளும் தூா்வாரப்பட்டன. இதன்மூலம் மழை நீா் முழுவதும் சேமிக்க கூடியநிலை ஏற்பட்டுள்ளது.

நீா் மேலாண்மைத் திட்டத்தை உருவாக்கித் தந்திருக்கிறோம். நீா் மேலாண்மையில் புரட்சி, தொழிலில் புரட்சி, எல்லாத் துறைகளிலும் புரட்சி செய்திருக்கிறது அதிமுக அரசு என்றாா் அவா்.

முன்னதாக, அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி, அவரது கணவா் வி.முருகன் ஆகியோா் தமிழக முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT