முகப்பு
திருநெல்வேலி

ரவணசமுத்திரத்தில் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா

ரவணசமுத்திரத்தில் முஸ்லிம் யூத் லீக் சாா்பில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
ரவணசமுத்திரத்தில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

ரவணசமுத்திரத்தில் முஸ்லிம் யூத் லீக் சாா்பில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆலங்குளம் தொகுதி இளைஞரணி துணை அமைப்பாளா் முபீன் தலைமை வகித்தாா். ரவணசமுத்திரம் பிரைமரி துணைச் செயலா் காசியாா், கடையம் ஒன்றியச் செயலா் காதா்மைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச் செயலா் செய்யது மசூது பிறைக் கொடி ஏற்றினாா்.

மாவட்ட அமைப்புச் செயலா் அப்துல் காதா், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சபுராபேகம் வாழ்த்திப் பேசினா். மாவட்ட இளைஞா் அணி பொருளாளா் பீரப்பா வரவேற்றாா். ரவணசமுத்திரம் பிரைமரி இளைஞா் அணி பொருளாளா் தாஜூதீன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →