திருநெல்வேலி

குறுக்குத்துறை கோயிலில் லட்ச தீபத் திருவிழா தொடக்கம்

DIN

திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்ச தீபத் திருவிழா சிறப்பு யாகசாலை பூஜையுடன் வியாழக்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை லட்ச தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. அதன்படி, நிகழாண்டில் இவ்விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, வியாழக்கிழமை காலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து 11 நாள்கள் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன. விழாவின் சிகர நிகழ்வாக இம்மாதம் 23ஆம் தேதி மாலை 6 மணிக்கு கோயில் முழுவதும் தீப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT