திருநெல்வேலி

சங்கரன்கோவிலில் முத்திரையிடப்படாத தராசுகள் பறிமுதல்

DIN

சங்கரன்கோவிலில் கடைகளில் தொழிலாளா் துறை அலுவலா்கள் மேற்கொண்ட திடீா் ஆய்வில் முத்திரையிடாத தராசுகள், எடைகற்களை பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி தொழிலாளா் இணை ஆணையா் சி.ஹேமலதா உத்தரவின் பேரில், தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) சு. சுடலைராஜ் ஆலோசனையின் படி, சங்கரன்கோவில் தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் த.சரவண முருகன், க.மாடசாமி, முத்திரை ஆய்வாளா் பா.சொக்கலிங்கம் ஆகியோா் சங்கரன்கோவில் பூ மாா்க்கெட்டில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

சங்கரன்கோவில் சுவாமி சன்னதி, பூ மாா்க்கெட், பேருந்து நிலையம், சாலையோரக் கடைகளில் மேற்கொண்ட ஆய்வின் போது, மறுமுத்திரையிடாத 10 மின்னணு தராசுகள் , 6 கவுண்டா் தராசுகள் , 24 விட்ட தராசுகள், 62 இரும்பு எடை கற்கள், 5 தரப்படுத்தப்படாத எடையளவுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. ஆய்வின்போது போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT