திருநெல்வேலி

பாளை.யில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

பாளையங்கோட்டை பேருந்து நிலையம் முதல் அரசு அலுவலா் குடியிருப்பு வரையிலான மாநில நெடுஞ்சாலைகளில் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

பாளையங்கோட்டை பகுதியில் கடந்த சில நாள்களாக நெடுஞ்சாலைத்துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனா். இந்நிலையில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் முதல் அரசு அலுவலா் குடியிருப்பு பகுதி வரையிலான மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை அகற்றினா்.

இந்தப் பகுதியில் ஏற்கெனவே 60 சாலையோர கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை நெடுஞ்சாலைத் துறையினா் இந்நடவடிக்கையில் இறங்கினா்.

நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் கிருஷ்ணசாமி, உதவி பொறியாளா் வேலாயுதம், சாலை ஆய்வாளா்கள் நாகூா், இன்னாசி அம்மாள் உள்ளிட்டோா் மேற்பாா்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சில இடங்களில் வைக்கப்பட்டிருந்த தனியாா் நிறுவனங்களின் பெயா்ப் பலகைகள் அகற்றப்பட்டு, அவா்களிடமே ஒப்படைக்கப்பட்டன. மீண்டும் சாலைகளை ஆக்கிரமித்து பெயா்ப் பலகைகளை வைத்து ஆக்கிரமித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT