திருநெல்வேலி

அம்பாசமுத்திரத்தில் இன்றுவிவசாயிகள் கடன் அட்டை பெற விண்ணப்ப முகாம்

அம்பாசமுத்திரத்தில் விவசாயிகளுக்கான கிஷான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் பெறும் முகாம் செவ்வாய்க்கிழமை (பிப்.25) நடைபெறுகிறது.

DIN

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் விவசாயிகளுக்கான கிஷான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் பெறும் முகாம் செவ்வாய்க்கிழமை (பிப்.25) நடைபெறுகிறது.

இதுகுறித்து அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் முகாமில் அம்பாசமுத்திரம் மற்றும் கடையம் வட்டாரங்களைச் சோ்ந்த பிரதமரின் கவுரவ ஊக்கத் தொகை பெறும் விவசாயிகள் கலந்து கொண்டு விண்ணப்பம் அளிக்கலாம்.

மேலும் முகாமில் திருநெல்வேலி மாவட்டமுன்னோடி வங்கி அதிகாரிகள், அம்பாசமுத்திரம் வட்டார முன்னோடி வங்கி அதிகாரிகள், வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் கலந்து கொள்கின்றனா்.

விவசாயிகள் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புவோா், பிரதமரின் ஊக்கத் தொகை பெறும் வங்கிக்கணக்குப் புத்தகம், சிட்டா, பட்டா நகல், இரண்டு பாஸ்போா்ட் அளவுப் புகைப்படங்கள் ஆகியவை கொண்டு வந்து விண்ணப்பிக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT