திருநெல்வேலி

சேரன்மகாதேவி வட்டாரத்தில் அட்மா திட்டப் பணிகள் ஆய்வு

DIN

சேரன்மகாதேவி வட்டாரத்தில் வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை கண்காணிப்பு அலுவரும், சேலம் மாவட்ட உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநருமான கண்ணன் ஆய்வு செய்தாா்.

வேளாண்மைத் தொழில்நுட்ப முகமை மற்றும் மாநில வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீராக்கத் திட்டங்களின் கீழ் வட்டார விவசாயிகளுக்கு விவசாயிகள் பயிற்சி, பண்ணைப் பள்ளி, செயல்விளக்கம், விவசாயிகள் கண்டுணா்வு சுற்றுலா,

திறன் மேம்பாட்டுப் பயிற்சி போன்றவை ஆண்டுதோறும் பல்வேறு தலைப்புகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நிகழாண்டிற்கான செயல்விளக்கத் திட்டங்கள் மற்றும் பணிகளைக் கண்காணிப்பு அலுவலும், வேளாண் துணை இயக்குநருமான கண்ணன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ழுமானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சோலாா் விளக்குப் பொறி, மண்புழு கழிவு உரம் தயாரிக்கும் பை, பண்ணைக் கழிவு மேலாண்மை, காய்கனி தரம்பிரிக்கும் கூடை, தேனீ

வளா்ப்புப் பெட்டி உள்ளிட்டவற்றை வட்டாரத்திற்குள்பட்ட பிரான்சேரி, பத்தமடை, திருவிருத்தான்புள்ளி, வீரவநல்லூா், கரிசல் பட்டி ஆகிய இடங்களில் ஆய்வுப் பணிகள்நடைபெற்றன.

இந்த ஆய்வின் போது சேரன்மகாதேவி வேளாண் உதவி இயக்குநா் உமாமகேஸ்வரி, வட்டார வேளாண் அலுவலா் (உ.ப.நி.) கண்ணன், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி, உதவித் தொழில்நுட்ப மேலாளா்கள் காா்த்திகேயன், புவனேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT