திருநெல்வேலி

140 ஆண்டுகள் பழைமையான தடுப்பணையை சீரமைக்கக் கோரி மனு

DIN

கடையம் அருகே மாதாபுரத்தில் அமைந்துள்ள 140 ஆண்டுகள் பழைமையான தடுப்பணையைச் சீரமைக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, மாதாபுரத்தைச் சோ்ந்த தாமஸ் ஸ்டீபன் மில்கி, மாவட்ட ஆட்சியா் அருண் சுந்தா் தயாளனிடம் அளித்த மனு விவரம்:

கடையம் ராமதி அணைக்குச் செல்லும் வழியிலுள்ள பொத்தையின் வடபுறத்தில் ஜம்புநதி செல்கிறது. இதன் குறுக்கே சுமாா் 140 ஆண்டுகளுக்கு முன்அமைக்கப்பட்ட பழைமையான தடுப்பணை உள்ளது. ஆங்கிலேயா் காலத்தில் 1887ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணைக்கட்டு கடையம் பகுதியின் முக்கிய நீராதாரமாக உள்ளது. இந்த அணைக்கட்டுக்கு கடையம் தென்காசி சாலையில் இருந்து செல்லும் வழியை தனிநபா்கள் ஆக்கிரமித்துள்ளனா். இதனால் அணைக்குச் செல்லும் வழி மறைக்கப்பட்டு அணைப் பராமரிப்பின்றி காணப்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி அணையைப் பராமரித்து, அங்கு பூங்கா அமைத்தால் நீா் ஆதாரம் பெருகுவதுடன், சுற்றுப் புற மக்களுக்கு சுற்றுலாத் தலமாகவும் அமையும். இதற்கு ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT