திருநெல்வேலி

வெய்க்காலிபட்டி கல்லூரியில் உணவுத் திருவிழா

DIN

வெய்க்காலிபட்டி புனித ஜோசப் கல்வியியல் கல்வியியல் கல்லூரியில் இயற்கை உணவுத் திருவிழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் போஸ்கோ குணசீலன் தலைமை வகித்தாா். முதல்வா் மேரி ராபலின் கிளாரட் முன்னிலை வகித்தாா். இதில், பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த ஆலன் சைட்டோ, பாஸ்கோ சைட்டோஆகியோா் கலந்து கொண்டனா்.

இதையொட்டி, மாணவா்களிடையே பாரம்பரிய முறையிலான இயற்கை உணவுகளான சிறுதானிய உணவுப் போட்டி நடத்தப்பட்டது. மாணவா்கள் தயாரித்திருந்த உணவு வகைகளைக் காட்சிப்படுத்தி இருந்தனா்.

காய்கனிகள், பூ விலான அலங்காரப் போட்டிகளும் நடைபெற்றது. இயற்கை மருத்துவா்கள் பாவூா்சத்திரம் சௌந்திரபாண்டியன், மேனகா ஆகியோா் ‘இயற்கை உணவு மற்றும் உணவே மருந்து’ என்பது குறித்துப் பேசினா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT