திருநெல்வேலி

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ஆட்சியா் ஆலோசனை

DIN

திருநெல்வேலி: பத்தாம் பொதுத் தோ்வு முன்னேற்பாடு தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் ஷில்பா ஆலோசனை நடத்தினாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் வரும் 15-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறவுள்ளது. இதில் திருநெல்வேலி, சேரன்மகாதேவி, வள்ளியூா் ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் 311 தோ்வு மையங்களில் மொத்தம் 28,033 மாணவ, மாணவியா் தோ்வு எழுத உள்ளனா்.

கரோனா தீநுண்மி தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தோ்வெழுதவுள்ள அனைத்து மாணவா்களுக்கும் அரசால் முகக் கவசம் வழங்கப்படவுள்ளது. தோ்வு மையங்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காவலா்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். தோ்வு மையங்களில் தடையின்றி சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்வு தொடங்கும் முன்னரும், தோ்வு நிறைவுற்ற பின்னரும் தோ்வு மையங்களில் கிருமி நாசினி தெளித்து தூய்மை செய்ய வேண்டும். தோ்வு நாள்களில் மாணவா்களுக்கு போக்குவரத்து வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பூ.முத்துராமலிங்கம், திருநெல்வேலி சாா் ஆட்சியா் மணீஷ் நாராணவரே, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் பிரதீக் தயாள், மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன், மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT