திருநெல்வேலி

நெல்லையப்பர் கோயில் முன்பு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோயில்களை திறக்கக்கோரி இந்துமக்கள் கட்சியினர் வெள்ளிக்கிழமை திருநெல்வேலி நகரம் நெல்லையப்பர் கோயில் முன்பு முழங்காலிட்டு சூடன் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

கோயில்களை திறக்கக்கோரி இந்துமக்கள் கட்சியினர் வெள்ளிக்கிழமை திருநெல்வேலி நகரம் நெல்லையப்பர் கோயில் முன்பு முழங்காலிட்டு சூடன் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி தென்மண்டல தலைவர் ஏ.காந்திமதி தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் அணி தலைவி எம்.லெட்சுமி தொடங்கிவைத்தார். தென்மண்டலச் செயலர் டி.கே.பி.ராஜபாண்டியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

மாநில துணைத் தலைவர் எஸ்.சக்தி பாண்டியன், மாவட்ட தலைவர் எஸ்.உடையார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் வாசல் முன்பு முழங்காலிட்டு சூடன் ஏற்றி முழக்கங்கள் எழுப்ப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸôர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 30 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சித்த மருத்துவப் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் பரிந்துரை

இந்திய பண்பாட்டின் பிரதிபலிப்பு வந்தே மாதரம்: ஓம் பிா்லா

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

பிரதமரின் வந்தே மாதரம் விவாதம்: மம்தா வரவேற்பு

SCROLL FOR NEXT