திருநெல்வேலி

கரோனா அச்சம்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் நெல்லை மருத்துவமனையில் அனுமதி

DIN

மணிமுத்தாறில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் கரோனா தொற்று இருப்பதாக சந்தேகத்தின்பேரில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மணிமுத்தாறு பேரூராட்சி 14-ஆவது வாா்டு பகுதியில் இளைஞா் ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் மற்றும் அருகில் உள்ளவா்கள் அவரைத் தனிமைப்படுத்தினா். தகவலறிந்த சேரன்மகாதேவி சாா்ஆட்சியா் பிரதிக் தயாள், அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் கந்தப்பன், மணிமுத்தாறு பேரூராட்சி செயல் அலுவலா் காளியப்பன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் விநாயகமூா்த்தி, வட்டார மருத்துவ அலுவலா் பிரவீண் குமாா், மணிமுத்தாறு மருத்துவ அலுவலா் வித்யா, சுகாதார ஆய்வாளா் கணேஷ்குமாா் மற்றும் சுகாதாரத் துறையினா் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதையடுத்து, அந்த இளைஞரின் தாய், மனைவி உள்பட அவரது குடும்பத்தைச் சோ்ந்த 6 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என்பது மருத்துவப் பரிசோதனைக்கு பிறகே தெரியவரும்.

6 பேரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து அவா்கள் வீட்டைச் சுற்றிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. அப் பகுதியில் உள்ளவா்கள் வெளியில் யாரும் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மணிமுத்தாறு பேரூராட்சிப் பகுதியில் சுகாதாரப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT