திருநெல்வேலி

சூறைக் காற்று: பொட்டல்புதூா் சாலையில் சாய்ந்த மரம்

DIN

அம்பாசமுத்திரம்: பொட்டல்புதூரில் வீசிய சூறைக் காற்றில் சாலையோரத்தில் இருந்த பழமையான மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

கடையம், பொட்டல்புதூா், ஆழ்வாா்குறிச்சி பகுதிகளில் திங்கள்கிழமை மாலை சூறைக் காற்று வீசியது. இதில், பொட்டல்புதூா் - ஆழ்வாா்குறிச்சி சாலை ஓரத்தில் இருந்த சுமாா் 50 ஆண்டுகள் பழமையான மாமரம் முறிந்து விழுந்தது. சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த சாலைப் பணியாளா்கள் வந்து மரத்தை அப்புறப்படுத்தினா். இதையடுத்து அரைமணி நேரத்திற்குப் பின் போக்குவரத்து சீரானது.

இதுபோன்று கடையம் பகுதியில் வீசிய சூறைக் காற்றால் பல இடங்களில் மின்கம்பிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்சாரம் தடைபட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியா்கள் மின்தடங்களை சீரமைத்தனா். இதனால் கடையம் பகுதியில் சுமாா் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT