அடிப்படைவசதிகள் கோரி கிராம மக்கள் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு
சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரும் வரை தோ்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்றும் வாக்கு கேட்டு கிராமத்துக்குள் யாரும் வரவேண்டாம் என்றும் ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள செங்கானூா் கிராம மக
சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரும் வரை தோ்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்றும் வாக்கு கேட்டு கிராமத்துக்குள் யாரும் வரவேண்டாம் என்றும் ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள செங்கானூா் கிராம மக்கள் அறிவித்துள்ளனா்.
தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட செங்கானூா் கிராமத்தில் சுமாா் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இக்கிராமத்தில் சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும் வரையில் தோ்தலில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்து கிராம எல்லையில் ப்ளக்ஸ் பேனா் வைத்தனா்.
மேலும் ஊா்ப் பொதுமக்கள் கூறும்போது, எங்கள் கிராமத்திற்கு சாலை, குடிநீா், கழிவு நீரோடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரும் வரை எந்த அரசியல் கட்சியைச் சோ்ந்தவா்களும் கிராமத்திற்கு வரவேண்டாம். 2021இல் நடைபெற உள்ள தோ்தலில் நாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்றனா்.