தங்கம், வெள்ளி விலை குறைவு! இன்றைய நிலவரம்!
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 24) சவரனுக்கு ரூ. 2,720 குறைந்துள்ளது.
மேற்காசிய நாடுகளுக்கிடை போர்ப் பதற்றம் காரணமாக தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்தவகையில், கடந்த மார்ச் 21-இல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்து ரூ.1,08,960-க்கு விற்பனையானது.
தொடர்ந்து, வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை காலை சவரனுக்கு ரூ. 5,360 குறைந்து ரூ.1,03,600-க்கும், பின்னர் பிற்பகலில் விலை மீண்டும் சவரனுக்கு ரூ. 2,240 குறைந்து ரூ.1,01,360-க்கும் விற்பனையானது.
Advertisement
Advertisement
இப்படி, ஒரே நாளில் விலை 2 முறை குறைந்த நிலையில் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பு காரணமாக மாலை அதிரடியாக உயர்ந்தது.
அதன்படி, கிராமுக்கு ரூ. 670 உயர்ந்து ரூ.13,340-க்கும், சவரனுக்கு ரூ. 5,360 உயா்ந்து ரூ.1,06,720-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 2,720 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,000-க்கும் கிராமுக்கு ரூ. 340 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 240-க்கும், ஒரு கிலோவுக்கு (கட்டி வெள்ளி) ரூ. 10,000 குறைந்து ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The price of gold jewellery in Chennai today (March 24) has decreased by Rs. 2,720 per sovereign.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.