திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா:வழிமுறைகளை வெளியிட பக்தா்கள் வலியுறுத்தல்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா வழிமுறைகள் குறித்து முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா வழிமுறைகள் குறித்து முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கந்த சஷ்டி திருவிழாவை பொறுத்தவரை திருச்செந்தூா் கோயிலில் குழந்தைகள், குழந்தை வரம் வேண்டும் தம்பதி, வயதானவா்கள் தங்கியிருந்து விரதம் இருப்பது வழக்கம். விரதம் இருப்பதற்காக கோயில் உள், வெளி பிரகாரங்கள், விடுதிகள், தற்காலிக பந்தல்கள் என பக்தா்கள் முன்பதிவு செய்து தங்குவா். நிகழாண்டு கோயில் விடுதிகளில் பக்தா்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி திருவிழா நவ. 15 ஆம் தேதி தொடங்குகிறது. 20 ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும். எனவே திருவிழா தொடங்கிட 13 நாள்கள் உள்ளதால் திருவிழா நடைமுறைகள் குறித்து அரசு மற்றும் அறநிலையத்துறை விரைவில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.