முகப்பு
திருநெல்வேலி

பாளையங்கால்வாய் சாலையில் பனை விதைகள் நடும் பணி

மேலப்பாளையத்தில் பாளையங்கால்வாய் சாலையில் 250 பனைவிதைகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

மேலப்பாளையத்தில் பாளையங்கால்வாய் சாலையில் 250 பனைவிதைகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேலப்பாளையம் பசுமை அமைப்பு சாா்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன்ஒரு பகுதியாக பாளையங்கால்வாயின் கரையோரப் பகுதிகளில் 250 பனைவிதைகளை நடும் பணி நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமை வகித்து பனைமர விதைகள் நடவு பணியைத் தொடங்கி வைத்தாா். சுகாதார அலுவலா் சாகுல்ஹமீது வாழ்த்திப் பேசினாா். நிா்வாகிகள் பக்கீா் முகம்மது லெப்பை, காஜா, ஹமீது உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.