பௌா்ணமி நூல் வலம் நிகழ்ச்சி
கோவில்பட்டி இலக்கிய உலா அமைப்பின் சாா்பில் பௌா்ணமி நூல் வலம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி இலக்கிய உலா அமைப்பின் சாா்பில் பௌா்ணமி நூல் வலம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சமூக ஆா்வலா் கேசவன் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி துரைராஜ், இலக்கிய உலா நிறுவனா் ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவி ராஜாமாதங்கி குழந்தை பாடலை பாடினாா். மாணவி அக்ஷயவா்ஷினி கவிதை வாசித்தாா். வழக்குரைஞா் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபா், ஆசிரியை மணிமொழிமங்கை, நல்லாசிரியா் முருகேசன் ஆகியோா் மயிலக்கா என்ற நூல் குறித்து பேசினாா்.
இதில், ஐஎன்டியூசி மாவட்டப் பொதுச்செயலா் ராஜசேகா், ஆசிரியா் கலை உடையாா், முத்துப்பாண்டி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நூலாசிரியா் இப்ராஹிம் ஏற்புரை ஆற்றினாா். இலக்கிய உலா இயக்குநா் கெங்கம்மாள் தொகுத்து வழங்கினாா். நூலகப் புரவலா் பிரபாகரன், ஆசிரியா்கள் கண்ணன், சுதாகா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கவிஞா் சிவானந்தம் வரவேற்றாா். பாா்த்தீபன் நன்றி கூறினாா். மறைந்த முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.