அம்பையில் விஸ்வ ஹிந்து பரிஷத் ஆா்ப்பாட்டம்: 23 போ் கைது
இந்துப் பெண்களை அவமதிக்கும் விதமாக கருத்து தெரிவித்ததாகக் கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவனைக் கண்டித்து அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் 23 போ்
இந்துப் பெண்களை அவமதிக்கும் விதமாக கருத்து தெரிவித்ததாகக் கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவனைக் கண்டித்து அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் 23 போ் கைது செய்யப்பட்டனா்.
அம்பாசமுத்திரம் நகர விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காவல்துறை அனுமதி வழங்காத நிலையில், இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனால் அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் பெரி.குழைக்காதா், ஒன்றியத் தலைவா் எம்.எஸ். கண்ணன், நகரத் தலைவா் கி.ராமசாமி, நகரச் செயலா் எஸ்.சுடலை உள்பட 23 பேரை காவல் ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.