முகப்பு
திருநெல்வேலி

நெல்லை ஆட்சியரிடம் விசிக புகாா் மனு

திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் முறைகேடு நிகழ்வதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் முறைகேடு நிகழ்வதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி இரணியன் உள்ளிட்டோா் அளித்த மனு:

நான்குனேரி ஊராட்சி ஒன்றியம், வெங்கட்டாபுரம் உள்பட 27 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அரசு விதிகளுக்கு மாறாக லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது. எனவே, இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.