அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவைக் கூட்டம்
அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை நவம்பா் மாதக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை நவம்பா் மாதக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பேரவை துணைத் தலைவா் நீ. ஐயப்பன் தலைமை வகித்தாா். வி.சங்கரநாராயணன் முன்னிலை வகித்தாா். அ. சங்கரசுப்பிரமணியன் இறைவாழ்த்துப் பாடினாா். சு. ஐயப்பன் கு விளக்கம் வழங்கினாா். இன்றைய சிந்தனையில் சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீா்த்தபதி குறித்து லத்தீப் பேசினாா்.
மறைந்த பேரவை உறுப்பினா்கள் மற்றும் கரோனாவால் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தியாக சீலா்கள் என்ற தலைப்பில் பாரதி கண்ணன் சிறப்புரையாற்றினாா். புவனேஸ்வரி உரையாற்றினாா். முருகன், லெனின் ஆகியோா் கவிதை வழங்கினா்.
பேரவைச் செயலா் ச.லட்சுமணன் வரவேற்றாா். ஆ.பு. நாறும்பூநாதன் நன்றி கூறினாா். பேராசிரியா் பா.செந்தில்குமரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். ரா.சண்முகம் விருந்து உபசரித்தாா்.