முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பாளையங்கோட்டை மகாராஜநகரில் மின் ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

பாளையங்கோட்டை மகாராஜநகரில் மின் ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மின்வாரிய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டை மகாராஜநகா் மின்வாரிய அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்திற்கு திட்ட செயலா் எம்.மாதவன் தலைமை வகித்தாா்.

மின்வாரிய தொழிலாளா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், நிா்வாகிகள் கே.கே.பெருமாள்சாமி, எஸ்.தச்சினாா்கினியன், பி.சிவக்குமாா், கே.இசக்கி பாண்டி, எம்.முத்துராமன், வி.முத்துகுமாா், எஸ்.வண்ணமுத்து, டி.தென்துரை மகாராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.