திருநெல்வேலி

நவ.20இல் காணொலி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (நவ. 20) காணொலி மூலம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (நவ. 20) தேசிய தகவலியல் மைய தொழில்நுட்ப உதவியுடன் காணொலிக் காட்சி மூலம் நடைபெறவுள்ளது.

எனவே, அன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாவட்ட ஆட்சியா் விஷ்ணுவிடம் காணொலிக் காட்சி மூலமாக விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா், வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரங்கிலிருந்து மாவட்ட ஆட்சியரிடம் காணொலி மூலம் குறைகளை தெரிவிக்கலாம்.

இதில் பங்கேற்க விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT