முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரியில் குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே கொலை முயற்சி, திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே கொலை முயற்சி, திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நான்குனேரி அருகேயுள்ள தம்புபுரம் பாஸ்கா் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் பழனி(56). இவா் மீது கொலை முயற்சி மற்றும் திருட்டு வழக்குகள் நான்குனேரி காவல்நிலையத்தில் உள்ளன.

இதையடுத்து, மாவட்ட காவல்வகண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் விஷ்ணு உத்தரவுப்படி, பழனியை நான்குனேரி காவல் ஆய்வாளா் சபாபதி கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.