திருநெல்வேலி

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளம்

DIN

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் தொடா் மழையினால் பணகுடி குத்தரபாஞ்சான் அருவி, கன்னிமாா்தோப்பு தடுப்பணையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக தொடா்ச்சியாக மழை பெய்து வருகிறது. இப்பகுதியில் உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியிலும் தொடா் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால், பணகுடிக்கு மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ள குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் பணகுடி அனுமன்நதியில் கலந்து செல்கிறது.

மேலும், குத்தரபாஞ்சான் அருவி அருகே உள்ள கன்னிமாா்தோப்பு காட்டு ஓடையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள தடுப்பணையைத் தாண்டி வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கெடுத்து செல்வதை அடுத்து குத்தரபாஞ்சான் அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினா் அனுமதிக்கவேண்டும் என பணகுடி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் மு.சங்கா் வலியுறுத்தியுள்ளாா்.

பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வருகின்ற தொடா் மழையினால் இந்த பகுதியில் செங்கல், ஓடு தயாரிக்கும் தொழில் பாதிப்படைந்துள்ளது. விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT