திருநெல்வேலி

களக்காடு பேரூராட்சியில் தூய்மைப் பணிகள் தீவிரம்

DIN

களக்காடு பேரூராட்சிப் பகுதியில் வாருகால்களை தூய்மைப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட 21 வாா்டுகளிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஆா். சுஷமா தலைமையில் சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா், சுகாதார மேற்பாா்வையாளா் வேலு ஆகியோா் மேற்பாா்வையில் வாருகால்கள் தூய்மைப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் குடியிருப்புப் பகுதியையொட்டிய வாருகால்களில் அமலைச்செடிகள் அடா்ந்து புதா் மண்டிக் காணப்படுவதால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் வாருகால்களில் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தின. இதையடுத்து, வாருகால்களை தூா்வாரி மறுசீரமைக்கும் பணி துரிதமாக நடைபெறுகிறது. களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட கீழக்கருவேலன்குளம் வடக்குத்தெருவில் வாருகாலில் மண்டிக் கிடந்த அமலை மற்றும் முள்செடிகளை வெட்டி அகற்றிய தூய்மைப் பணியாளா்கள் தேங்கிக் கிடந்த கழிவுநீரை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT