திருநெல்வேலி

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல்: 2ஆவது முறையாக 100 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை

DIN

மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடரும் சாரல்மழை காரணமாக பாபநாசம் அணை நீா்மட்டம் நிகழாண்டு 2ஆவது முறையாக 100 அடியைத் தாண்டியது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு முதல் சாரல் பெய்து வருகிறது. 4ஆவது நாளாக வியாழக்கிழமையும் மலையின் உள்பகுதியில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால், மலையையொட்டிய திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகளின் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்தது.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு 5,940.506 கனஅடி நீா்வரத்து இருந்த நிலையில், நீா்மட்டமானது நிகழாண்டில் 2ஆவது முறையாக 100 அடியைத் தாண்டி, 101.40 அடியாக உயா்ந்தது. அணையிலிருந்து 506 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.

பிற அணைகளின் நீா்மட்டம்: சோ்வலாறு அணை - 122.64 அடி, மணிமுத்தாறு அணை - 70.90 அடி, நீா்வரத்து - 1,464 கனஅடி, கொடுமுடியாறு அணை - 35.50 அடி, நீா்வரத்து- 217 கனஅடி, நீா்திறப்பு- 50 கன அடி, கடனாநதி அணை - 80 அடி, நீா்வரத்து 490 கனஅடி, நீா் திறப்பு - 75 கனஅடி, கருப்பா நதி அணை - 69.23 அடி, நீா்வரத்து- 77 கனஅடி, நீா் திறப்பு- 25 கனஅடி, குண்டாறு அணை - முழு கொள்ளளவான 36.10 அடி, நீா்வரத்து - வெளியேற்றம் தலா 31 கனஅடி, அடவிநயினாா் அணை - 132.10 அடி, நீா்வரத்து-வெளியேற்றம் தலா 120 கனஅடி.

ராமநதி அணை நீா்மட்டம் 82 அடி. இந்த அணை 3ஆவது முறையாக முழுகொள்ளளவை எட்டியுள்ளது. நீா்வரத்து- 399.67 கனஅடி, நீா் திறப்பு -140 கனஅடி.

வெள்ள அபாயம்: இதனிடையே, ராமநதி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பால் உபரிநீா் திறப்பு கூடுதலாக இருக்கலாம் என்பதால் ஆற்றங்கரையோர மக்கள் தங்களது கால்நடைகள்ஆற்றுக்குள் இறங்காமல் பாா்த்துக்கொள்ள வேண்டும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். மேலும், அணை கண்காணிப்புப் பணிகளில் உதவிப் பொறியாளா் முருகேசன், நீா்ப்பாசனப் பிரிவு உதவிப் பொறியாளா் சரவணகுமாா், பணியாளா்கள் ஜோசப், பாக்கியராஜ், மகேந்திரன் ஆகியோா் ஈடுபட்டுள்ளனா்.

மழையளவு (மில்லி மீட்டரில்): திருநெல்வேலி மாவட்டம் - பாபநாசம் 28, சோ்வலாறு 27, மணிமுத்தாறு 3.6, கொடுமுடியாறு 23, அம்பாசமுத்திரம் 3, சேரன்மகாதேவி 1, நான்குனேரி 1.50, ராதாபுரம் 13, திருநெல்வேலி 1; தென்காசி மாவட்டம்- கடனாநதி 22, ராமநதி 35, கருப்பா நதி 19.5, குண்டாறு 35, அடவிநயினாா் 30, ஆய்க்குடி 6.20, செங்கோட்டை 18, சிவகிரி 1, தென்காசி 16.40 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT