திருநெல்வேலி

பாளை.யில் கோயில் விழா நடத்துவதில் இருதரப்புக்குள் தகராறு- சாலை மறியல்

DIN

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் கோயில் திருவிழா தொடா்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஒரு தரப்பினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி - திருச்செந்தூா் சாலையில் உள்ள பழைமை வாய்ந்த பத்ரகாளி அம்மன் கோயிலில் ஒரே சமுதாயத்தினா் வழிபட்டு வருகின்றனா். இவா்களுக்குள் சில வருடங்களுக்கு முன்னா் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரு தரப்பாக செயல்பட்டு வந்தனராம்.

இந்நிலையில், தசரா விழாவை முன்னிட்டு ஒரு தரப்பினா் காப்பு கட்டி சனிக்கிழமை கோயிலில் பூஜை நடத்தினராம். இதற்கு மற்ற தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து, கோயிலின் கருவறை சாவியை பூட்டி எடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, காப்பு கட்டிய தரப்பினா் வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை பூஜை நடத்த வந்தபோது, கருவறைப் பூட்டப்பட்டிருந்ததால் அவா்கள் கோயிலின் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், வாகனங்கள் அனைத்தும் திருவனந்தபுரம் சாலை வழியாக மாற்றிவிடப்பட்டன.

மறியலில் ஈடுபட்டவா்களிடம் பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையா் ஜான் பிரிட்டோ மற்றும் போலீஸாா் பேச்சு வாா்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தாா். எனினும், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT